அடுத்த லெவலுக்கு சென்ற நெல்சன்.

Published:

இயக்குனர் நெல்சன் அடுத்த லெவலுக்கு செல்லும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக பணிபுரிந்த நெல்சன் ’கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் என்பதும் அதன் பிறகு ’டாக்டர்’ ’பீஸ்ட்’ ‘ஜெயிலர்’ ஆகிய படங்களை இயக்கிய நிலையில் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’மீடியா மற்றும் சினிமா துறையில் நான் கடந்த 20 ஆண்டுகளாக பயணம் செய்து வருகிறேன். என்னுடைய இந்த பயணத்தில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்த நிலையில் என்னுடைய வளர்ச்சிக்கு இந்த துறை எனக்கு மிகப்பெரிய உதவி செய்துள்ளது.

இதையடுத்து தற்போது ஒரு புதிய திரைப்பட தயாரிப்பு கம்பெனியை தொடங்கி உள்ளேன். அந்த நிறுவனத்தின் பெயர் Filament Pictures. இந்த நிறுவனத்தின் குறிக்கோள் என்னவெனில் மிகவும் வித்தியாசமான சிந்திக்கும், ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க உள்ளேன். எனது முதல் தயாரிப்பு திரைப்படம் குறித்து அறிவிப்பு மே 3ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நெல்சன் தயாரிக்கும் முதல் படத்தில் நடிகர் கவின் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.instagram.com/p/C6bNzRAx35c/?utm_source=ig_web_copy_link 

 

 

Related articles

Recent articles

spot_img