மாஸ் நடிகரின் அடுத்த படத்தில் கரீனா கபூர் நடிக்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு பதில் தற்போது நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவர் யாஷ் என்பதும் இவர் நடித்த ‘கேஜிஎப்’ மற்றும் ’கேஜிஎஃப் 2’ ஆகிய இரு படங்களும் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் தற்போது யாஷ், ’ராமாயணம்’ என்ற படத்தில் ராவணன் கேரக்டரில் நடித்து வரும் நிலையில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’டாக்ஸிக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
’டாக்ஸிக்’ படத்தில் யாஷ் சகோதரியாக கரீனா கபூர் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் கால்சீட் காரணமாக இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் இதனை அடுத்து அந்த கரீனா கபூர் நடிக்கவிருந்த கேரக்டரில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் நயன்தாரா, சகோதரி வேடத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் இந்த கேரக்டரில் அவருக்கு முக்கியத்துவம் இருப்பதால் அவர் நடிக்க ஒப்புக் கொள்வார் என்று கூறப்படுகிறது.
நடிகை நயன்தாரா ஏற்கனவே மாதவன் நடித்து வரும் ’தி டெஸ்ட்’ மற்றும் யோகி பாபு உடன் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.