மொட்டை மாடி நீச்சல் குளத்தில் டிடி.. வைரல் வீடியோ..!

Published:

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடி, துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் எதிரே உள்ள நட்சத்திர ஹோட்டல் மொட்டை மாடி நீச்சல் குளத்தில் ஜாலியாக இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ’காபி வித் டிடி’ ‘ஜோடி நம்பர் ஒன்’ ’சூப்பர் சிங்கர்’ உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடி, சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் அது மட்டும் இன்றி சில பிரபலங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார் என்பதும் தெரிந்தது

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடிக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 3 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவ்வப்போது அவர் வெளிநாடு சுற்றுப்பயணம் செய்யும் புகைப்படங்கள் வீடியோக்களை அதில் பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் துபாய் சென்ற நிலையில் அங்குள்ள பல புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்த நிலையில் தற்போது அவர் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா எதிரே உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கி உள்ளார்.

அந்த நட்சத்திர ஓட்டலில் உள்ள மொட்டை மாடி நீச்சல் குளத்தில் அவர் ஜாலியாக குளிக்கும் காட்சிகள், புர்ஜ் கலிஃபா கட்டிடத்தை அவர் ரசிக்கும் காட்சிகள் உள்ளன. இந்த ஹோட்டல் மாடியில் உள்ள நீச்சல் குளத்திலிருந்து புர்ஜ் கலிஃபா கட்டிடத்தை பார்ப்பது தனது இதயத்தை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்றும் வானம் அளவுக்கு உயர்ந்துள்ள இந்த கட்டிடத்தை பார்த்து ஆச்சரியப்பட்டேன் என்றும் இந்த பயணம் தனக்கு என்றும் மறக்க முடியாத ஒரு பயணமாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். டிடியின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://www.instagram.com/reel/C6gZ8gxyQlb/?utm_source=ig_web_copy_link 

 

Related articles

Recent articles

spot_img