கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லவ் டுடே திரைப்படத்தை இயக்கி, அதில் ஹீரோவாகவும் நடித்தார்.
கோமாளியை விட இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. அதுமட்டுமின்றி உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அறிமுக ஹீரோவின் திரைப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்ததா என அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
லவ் டுடே வெற்றிக்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIC எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தன்னுடைய அடுத்த புதிய படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டார்.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். இவர் இயக்கத்தில் இதற்குமுன் வெளிவந்த ஓ மை கடவுளே திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்று பிரதீப் – அஸ்வத் மாரிமுத்து படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு டிராகன் என தலைப்பு வைத்துள்ளனர்.
https://x.com/pradeeponelife/status/1787040646358057057