மீண்டும் பாலிவுட்டில் அனிருத்

Published:

அனிருத் தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். பல ஹிட் பாடல்கள் கொடுத்த அவர் ஹிந்தியில் ஜவான் படம் மூலமாக அறிமுகம் ஆனார்.

1000 கோடிக்கும் மேல் வசூலித்த அந்த படத்தின் பாடல்களும் பெரிய ஹிட் தான்.

மீண்டும் ஷாருக் – அனிருத் கூட்டணி
இந்நிலையில் அனிருத்துக்கு மீண்டும் பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

ஷாருக் கான் அடுத்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் நடிக்க இருக்கும் கிங் படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஷூட்டிங் தொடங்க இருக்கும் நிலையில் முதற்கட்ட பணிகளை அனிருத் ஏற்கனவே தொடங்கிவிட்டாராம்.

படக்குழு பற்றிய அறிவிப்பு விரைவில் வீடியோஉடன் வெளிவர இருக்கிறது. அதற்காக தீம் மியூஸிக் இசையமைக்கும் பணிகளில் அனிருத் இறங்கி இருக்கிறாராம்.

மீண்டும் பாலிவுட்டில் அனிருத்.. டாப் ஹீரோ உடன் பிரம்மாண்ட கூட்டணி | Anirudh Teams Up With Shahrukh Again For King

Related articles

Recent articles

spot_img