சூப்பர்ஸ்டார் ரஜினி வேட்டையன் படத்தை முடித்துவிட்ட நிலையில் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க இருக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் டீஸர் பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்த நிலையில், அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் காத்திருந்தனர்.
தற்போது கூலி படத்திற்காக மாஸ் லுக்கில் ரஜினிக்கு லுக் டெஸ்ட் நடத்தி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
அந்த ஸ்டில்களை அவர் வெளியிட்டு இருக்கும் நிலையில் இணையத்தில் அது ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலும் ஷூட்டிங் ஜூலை மாதம் தொடங்கும் என்றும் அவர் அறிவித்து இருக்கிறார்.