ஆர்ஜே பாலாஜி தேர்வு செய்த நடிகை..!

Published:

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் அம்மன் கேரக்டரில் நயன்தாரா நடித்த நிலையில் அவர் இயக்கும் அடுத்த திரைப்படமான ’மாசாணி அம்மன்’ திரைப்படத்தில் அம்மன் வேடத்தில் த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் த்ரிஷாவையும் தற்போது கழட்டி விட்டு ஆர்ஜே பாலாஜி இன்னொரு நடிகை உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஆர்ஜே பாலாஜி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ’மாசாணி அம்மன்’ என்ற திரைப்படத்தை உருவாக்க ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டதாகவும் இந்த படத்திலும் நயன்தாராவை அவர் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டது.

இதனை அடுத்து நயன்தாராவுக்கு பதில் த்ரிஷாவை நடிக்க வைக்க ஆர்ஜே பாலாஜி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நிலையில் த்ரிஷா தற்போது ஒரே நேரத்தில் 6 படங்களில் நடித்து வருவதால் ஆர்ஜே பாலாஜி கேட்ட தேதிகளை அவரால் கொடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அடுத்த கட்டமாக ’மாசாணி அம்மன்’ படத்தில் நடித்த சமந்தாவிடம் ஆர்ஜே பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் ஒப்புக் கொண்டால் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. நடிகை சமந்தா இதுவரை அம்மன் வேடத்தில் நடித்ததில்லை என்பதால் அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related articles

Recent articles

spot_img