அஜித்தின் மாஸ் செகண்ட் லுக் போஸ்டர்..!

Published:

அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை திடீரென அவர் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான ’குட் பேட் அக்லி’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் என்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதால் அஜித் ரசிகர்கள் உற்சாகமாகினர்.

இந்த நிலையில் அறிவிக்கப்பட்டது போலவே சற்றுமுன் இந்த படத்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் அஜித் மாஸ் போஸில் இருக்கும் நிலையில் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளது போல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த படத்தின் போஸ்டரில் ’God Bless You மாமே’ என்ற வாசகம் இருப்பதை அடுத்து இதுதான் அந்த பாடலின் முதல் வரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு  தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் என்பதால் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கும் அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வெளியாகி உள்ள இரண்டாவது லுக் போஸ்டரிலும் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

https://x.com/MythriOfficial/status/1806314049858343176

Related articles

Recent articles

spot_img