‘வாஸ்கோடகாமா’ ரிலீஸ் தேதி இதுதான்

Published:

பிரபல தமிழ் நடிகை தேவயானியின் இளைய சகோத்தரர் நகுல் சங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆவார். நகுல் நடப்பில் கடந்த 2008 ஆம் வெளியான ‘காதலில் விழுந்தேன்’ படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது.

இதைத்தொடர்ந்து மாசிலாமணி, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னணி பாடகராகவும் உள்ள நகுல் இடையில் சூப்பர் சிங்கர் 7 நிகச்சியில் சிற்ப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டார்.

தற்போது டி-3 இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் ‘தி டார்க் ஹெவன்’ படத்தில் நகுல் பிசியாக நடித்துவருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்து வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்த ‘வாஸ்கோடகாமா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி ‘வாஸ்கோடகாமா’ படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

https://x.com/Nakkhul_Jaidev/status/1806885502681022632

https://x.com/5656Production/status/1806884737413218387

 

Related articles

Recent articles

spot_img