இந்திய சினிமாவில் தவிர்க்கமுடியாத முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர்கள் வெவ்வேறு நாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கமான ஒன்றே ஆகும். அவ்வாறே இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி பற்றி தகவல் கிடைத்துள்ளது.
விஜய் ஆண்டனி இந்தியா, தமிழ்நாட்டின் ஓர் முன்னணி திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் இசையமைத்த முதல் திரைப்படமாக சுக்ரன் திரைப்படம் ஆகும்.தற்போது திரைப்படத்தில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இவ்வாறான இவர் சமீபத்தில் பல நாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றார். இந்த நிலையிலேயே இவரது அடுத்த இசை நிகழ்ச்சி செப்டம்பர் 7 ஆம் திகதி இலங்கையில் நடைபெற உள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இதனை இலங்கை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
https://www.instagram.com/p/C81AOLVCTh6/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==