உலக அளவில் இன்றைய தினம் புது வருட தினத்தை வெகுவாக கொண்டாடி வருகின்றார்கள். அதன்படி சினிமா பிரபலங்களும் புது வருட பிறப்பை கோலாகலமாக தமது குடும்பத்தினருடன் மட்டுமின்றி ரசிகர்களுடனும் கொண்டாடி வருகின்றார்கள்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் வீட்டிற்கு முன்னால் அவருடைய ரசிகர்கள் கூடிய நிலையில் அவர்களுக்கு புது வருட வாழ்த்து சொல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். தற்போது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இவ்வாறு புது வருட வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்த ரஜினிகாந்தை பார்த்த ரசிகர்கள் தலைவா… தலைவா… ஹாப்பி நியூ இயர்… என கக்தி கூச்சலிட்டுள்ளனர். வழக்கமாகவே பண்டிகை தினங்களில் சூப்பர் ஸ்டாரின் வீட்டை ரசிகர்கள் முற்றுகை இடுவது வழக்கமான சம்பவமாக காணப்படுகிறது.
ஏற்கனவே சூப்பர் ஸ்டார் தனது எக்ஸ் தள பக்கத்தில் ‘நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்.. கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான்.. ஆனால் கை விட்டுடுவான்..’ என பதிவிட்டு தனது புது வருட வாழ்த்தை தெரிவித்து இருந்தார்.
இதை தொடர்ந்து தற்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ரஜினி வீட்டின் முன் கூடிய நிலையில் வெளியே வந்து கைகளை அசைத்து தனது புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.