Identity பட திரை விமர்சனம்

Published:

மலையாள சினிமாவில் தொடர்ந்து மிக தரமான படங்கள் வந்துக்கொண்டே தான் இருக்கிறது.

அதிலும் கிரைம் திரில்லர் என்றால் அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல், அந்த வகையில் டொவினோ தாமஸ், திரிஷா, வினய் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள ஐடென்டிட்டி எப்படியுள்ளது பார்ப்போம்.

படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு இளம் பெண் ஆடை மாற்றுவதை ட்ரையல் ரூமில் வீடியோவாக எடுத்து ஒருத்தன் மிரட்டி பணம் கேட்கிறான்.

அப்படி ஒரு பெண்ணை மிரட்டும் போது, ஒருவன் அவன் இருக்குமிடம் தேடி சென்று அனைத்தையும் அழித்து அவனையும் கொன்று அந்த இடத்தையே எரித்து விடுகிறான்.

இந்த கொலையை இதே கேஸை பாலோ செய்து வரும் திரிஷா நேரில் பார்க்கிறார். அப்போது அந்த செய்தியை தொலைக்காட்சியில் வெளியிட வேகமாக போக அவர் மீது லாரி மோதி பேஸ் ப்ளைண்ட் என்ற பாதிப்பு ஏற்படுகிறது.

தற்போது இந்த கேஸை வினய் விசாரிக்க, டொவினோ நன்றாக படம் வரைபவர், அவர் உதவியுடன் திரிஷாவிற்கு அந்த கொலை செய்தவன் முகம் மட்டும் நியாபகமிருக்க, அதை டொவினோ வரைகிறார்.

ஆனால், திரிஷா சொன்ன அத்தனை அடையாளமும் டொவினோ தாமஸுடன் ஒன்றி போக, அட இது என்னடா டுவிஸ்ட் என்று வினய் பார்வை டொவினோ மீது போக, அவரும் அப் நார்மலாக செயல்பட, சந்தேகம் வலுவாகிறது, இந்த நேரத்தில் நான் தான் அந்த கொலை செய்தேன் என்று ஒருவர் ஆஜராக, அட யார் தான்பா அந்த கொலை செய்தது என்ற சுவாரஸ்யமே இந்த Identity.

மலையாள படம் என்றாலே கிரைம் திரில்லர் எடுப்பதில் வல்லவர்கள், அப்படி ஒரு கிரைம் திரில்லரை ஆண்டின் இரண்டாம் நாளே இறக்கியுள்ளது மலையாள சினிமா.

படத்தின் முதல் பாதி முழுவதும் அந்த கொலையை செய்தது யார் என்ற பதட்டம் தொடங்க, இரண்டாம் பாதி அப்படியே மாறி எதோ போக்கிரி படம் பார்ப்பது போல் மாறுகிறது. டொவினோ தாமஸ் யார் என்ற கொஞ்சம் ஓவர் என்றாலும் படத்தின் கதைக்கு தேவை, அவரும் ஆ ஊ என்று அலட்டாமல் மௌனமாகவே தன் மேனரிசம் மூலமாவே கலக்கியுள்ளார்.

திரிஷாவும் ஒரு பேஸ் ப்ளைண்ட் பெண்ணாக படம் முழுவதும் ஒரு குழப்பத்துடனே வந்து கடைசியில் அவரும் அந்த கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஆள் யார் என்று கண்டுப்பிடிகும் இடம் சூப்பர்.

வினய் இந்த கதாபாத்திரம் பார்த்தவுடனே இவர் இந்த வேலையை செய்து இருப்பார் என தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை, அவரும் வழக்கம் போல் கொடுத்த வேலையை நன்றாகவே செய்துள்ளார்.

படத்தின் முதல் பாதி சீட் எஜ்-ல் உட்கார வைத்தாலும், இரண்டாம் பாதி களமே மாறி அதிரடி ஆக்‌ஷன் படம் பார்ப்பது போல் உள்ளது, லாஜிக் மீறலும் கொஞ்சம் வருகிறது,

ப்ளைட்டில் வரும் சண்டைக்காட்சி ஹாலிவுட் லெவல் தான். ஜாக்ஸ் பிஜாய் பின்னணி இசை படத்திற்கு மேலும் பலம், ஒளிப்பதிவு அட்டகாசம்.

படத்தின் முதல் பாதி நடிகர், நடிகைகள் பங்களிப்பு படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள்

இரண்டாம் பாதி முதல் பாதி விறுவிறுப்பை கொஞ்சம் பாதிக்கிறது. இன்னுமே சில காட்சிகள் புரியும்படி சொல்லியிருக்கலாம்.

Related articles

Recent articles

spot_img