தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். இவர் நடிப்பில் வெளியான “பத்து தல” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதைத் தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குநர் மணி ரத்னம் இயக்கியுள்ள “தக் லைஃப்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடிப்பதாக பல முறை தகவல்கள் வெளியாகின.பின்னர், இந்த தகவல்களில் உண்மை இல்லை என்றும் கூறப்பட்டது. இதனால் சிம்பு மற்றும் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படம் கைவிடப்பட்டதாகவே பலரும் நினைத்தனர்.
இந்த நிலையில், நடிகர் சிம்பு மற்றும் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இயக்குநர் தேசிங் பெரியசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.