12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் ஆகும் நடிகர் விஷாலின் திரைப்படம்..

Published:

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சுந்தர்.சி.

நிறைய தரமான படங்களை கொடுத்த இவர் நடிகராகவும் கலக்கி வருகிறார். கடைசியாக இவரது இயக்கத்தில் அரண்மனை 4 படம் வெளியாகி இருந்தது.

அச்சச்சோ என்ற ஒரு பாடலே படத்திற்கு ஹைலைட்டாக அமைந்தது, படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இப்போது சுந்தர்.சி, கலகலப்பு 3 பட வேலைகளில் படு பிஸியாக உள்ளார்.

சுந்தர்.சி இயக்கிய படங்களில் விஷால் மற்றும் சந்தானத்தை வைத்து மதகஜராஜா என்ற படத்தை இயக்கியிருந்தார்.

படம் தயாராகி ரெடியாக இருந்தும் வெளியாகவில்லை. தற்போது 12 ஆண்டுகள் கழித்து இப்படம் திரைக்கு வர இருக்கிறது. வரும் ஜனவரி 12, 2025 படம் ரிலீஸ் ஆக உள்ளதாம்.

Related articles

Recent articles

spot_img