`என்னை நீங்காதே நீ’ வீடியோ பாடல் வெளியானது

Published:

‘தேஜாவு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ள தருணம் படத்தில் கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் பால சரவணன், ராஜ் அய்யப்பன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராஜா பட்டார்ஜி ஒளிப்பதிவாளராகவும், அருள் சித்தார்த் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ள இப்படத்திற்க்கு தர்புகா சிவா பாடல்களுக்கான இசையும், அஸ்வின் ஹேமந்த் பிண்ணனி இசையும் மேற்கொண்டுள்ளனர். திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

https://twitter.com/kishendas/status/1875549555464532451

இந்நிலையில் படத்தின் பாடலான என்னை நீங்காதே நீ பாடலின் வீடியோ பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை மதன் கார்கி வரிகளில் கபில் கபிலன் மற்றும் பவித்ரா சாரி இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img