குட் பேட் அக்லி படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் கல்யாண் மாஸ்டர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் ரிலீசாக காத்துக் கொண்டிருக்கிறது.
அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்த வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை நெருங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது ரசிகர்களுக்கு குட் பேட் அக்லி படம் குறித்து சுவாரசிய தகவல் ஒன்றை கல்யாண் மாஸ்டர் கூறியுள்ளார்.
அதில் இந்த படத்தில் உள்ள பாடலில் செம்மையாக ஆட்டம் போட்டுள்ளார்.அவரது நடனத்தை பார்த்து சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.. இந்தப் பாடல் அஜித் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல் அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.