விஷாலுக்கு என்னாச்சி? அப்போலோ மருத்துவமனை…

Published:

சென்னையில் நடைபெற்ற “மதகஜராஜா” செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கை நடுங்கியபடியும், குரல் நடுங்கியும் பிரபல நடிகர் விஷால் பேசிய வீடியோ இணையத்தில் படு வைரலாகி வந்தது. விஷாலுக்கு என்ன நடந்தது என்று பலரும் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் வைத்தியசாலை இருந்து விஷாலின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியாகியுள்ளது. 

சுந்தர்.சி இயக்கத்தில் உருவான மதகஜராஜா திரைப்படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட போதும், படம் வெளியாத நிலையில், இந்த பொங்கல் பண்டிகையொட்டி இப்படம் 12ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட விஷால் பார்ப்பதற்கே மிகவும் சோர்வுடன், கண்கள் சிவந்தபடி, மைக்கை பிடித்து பேசமுடியாமல் இருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

இதைடுத்து, இணையத்தில் விஷால் கை நடுக்கத்துடன் பேசும் வீடியோ காட்டுத்தீ போல பரவியது. இதுகுறித்து பேசிய பத்திரிக்கையாளர் சேகுவேரா “காய்ச்சல் வந்தால் ஏன் கை நடுங்க வேண்டும், காய்ச்சல் இருக்கும் போது எதற்கு நிகழ்ச்சிக்கு வரவேண்டும் ” என்று பேசி இருந்தார்.

இவ்வாறு பல கருத்துக்கள் எழுந்தநிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து விஷால் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “நடிகர் விஷால் வைரஸ் காய்ச்சல் இருப்பதாகவும், அவர் முழுமையான படுக்கையில் ஓய்வில் இருக்குமாறு” அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. நடிகர் விஷால் குறித்து ரசிகர்கள் அனைவரும் விசாரித்து வருகிறார்கள்.

Related articles

Recent articles

spot_img