குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published:

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

ஜி.வி பிரகாஷ் பின்னணி இசையை மேற்கொள்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படம் ஏற்கனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அஜித்தின் மற்றொரு படமான ‘விடாமுயற்சி’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்ததால், இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஆனால் தற்போது ‘விடாமுயற்சி’ படமும் ஒரு சில காரணங்களால் பொங்கல் பண்டிகையில் வெளியாகவில்லை.

இந்த நிலையில், ‘குட் பேட் அக்லி’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

https://twitter.com/SureshChandraa/status/1876232694847140278

Related articles

Recent articles

spot_img