NEEK பட சூப்பர் அப்டேட்

Published:

பா. பாண்டி திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக, நடிகர் தனுஷ் இயக்குனராக களம் இறங்கிய திரைப்படம் தான் ராயன். அந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 158 கோடி ரூபாய் வசூல் செய்து மெகா ஹிட் திரைப்படமாக இப்பொழுது மாறி உள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் இசை, ராயன் திரைப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

ராயன் படத்தை தொடர்ந்து, தனது “குபேரா” திரைப்பட பணிகளில் ஈடுபட்டு வந்த நடிகர் தனுஷ், இப்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார். ஏற்கனவே அறிமுக நடிகர், நடிகைகளை வைத்து “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்கின்ற திரைப்படத்தை அவர் இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் அந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில், தனது இயக்குனர் தனுஷுடன் இணைந்து, “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” திரைப்படத்திற்கான பணிகளை தற்பொழுது துவங்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தனுஷின் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து அதை மாபெரும் வெற்றி திரைப்படங்களாக மாற்றியவர் ஜி.வி பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 

இசை அமைப்பாளராகவும், ஹீரோவாகவும் இப்போது 15க்கும் மேற்பட்ட படங்களில் அவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவருடைய NEEK படத்தின் அடுத்த கட்ட அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.இந்த நிலையில் இப்படம் பிப்ரவரி 7, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.என பட குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/wunderbarfilms/status/1876228058836767157

Related articles

Recent articles

spot_img