பிக் பாஸ் 7ம் சீசனில் டைட்டில் ஜெயித்தவர் அர்ச்சனா. அவரது காதலர் அருண் பிரசாத் தற்போது பிக் பாஸ் 8ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு இருக்கிறார்.
வழக்கமாக போட்டியாளர்களை பார்க்க குடும்பத்தினர் வருவார்கள். இந்த முறை பல போட்டியாளர்களின் காதலர்களையும் வீட்டுக்குள் அனுமதித்தனர். அதனால் அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்கு சென்று அருண் மற்றும் அனைவரிடமும் பேசிவிட்டு வந்தார்.
இந்நிலையில் தற்போது அர்ச்சனா பிக் பாஸ் 8 போட்டியாளரான சௌந்தர்யாவுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
சௌந்தர்யாவை எனக்கு பிடிக்க தொடங்கிவிட்டது. அவர் உண்மையாக இருக்கிறார். அவருக்கு உண்மையிலேயே organic ஆக தான் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என அர்ச்சனா கூறி இருக்கிறார்.