கார் ரேஸ் பயிற்சியில் உயிர் தப்பிய அஜித்

Published:

நடிப்பு, ரேஸிங் என பிசியாக இருக்கும் அஜித் குமார் நேற்று துபாய் சென்றார். மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்துள்ளார். இதில் குட்பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

சமீபத்தில் ‘அஜித்குமார் ரேஸிங்’என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கி அஜித், தற்போது அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகி்றார். அதன்படி கார் ரேஸிங்கில் கலந்துகொள்வதற்காக நேற்று அஜித் துபாய் சென்றார். இந்நிலையில், அங்கு தனது அணியினருடன் அஜித் இருக்கும் வீடியோ ஒன்று நேற்று வைரலானது. இச்சூழ்நிலையில் இன்று ரேசிற்கான பயிற்சியில் அஜித் கலந்துக்கொண்டார்.

அப்பொழுது அவர் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. அதன் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் அஜித்திற்கு ஒன்றும் ஆகாமல் உயிர் தப்பினார். கார் முன் பகுதி மிகுந்த சேதம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்பொழுது வேகமாக வைரலாகி வருகிறது.

தற்பொழுது இந்த விபத்தை குறித்து அவரது மேலாளர் அஜித் குமார் நலமாக இருப்பதாக தகவல் அளித்துள்ளார்.

https://twitter.com/Akracingoffl/status/1876595602945089585

Related articles

Recent articles

spot_img