கடந்த 2018 ஆம் ஆண்டு ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், சரவணன் மற்றும் அம்மு அபிராமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ராட்சசன்.
இப்படம் வெளியாகி ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருந்தார்.
விஷ்ணு விஷால் ஓஹோ எந்தன் பேபி திரைப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
விஷ்ணு விஷால் அடுத்து இரண்டு வானம் மற்றும் ஆர்யன் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் 3 படங்களில் நடிக்க இருக்கிறார்.
சமீபத்தில் நடந்த பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஷ்ணு விஷால் அடுத்து கட்டா குஸ்தி 2 மற்றும் ராட்சசன் 2 படத்தில் நடிக்க இருப்பதாக கூறினார். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில், விஷ்ணு விஷால் நேர்காணல் ஒன்றில், சினிமாவில் தான் கடந்து வந்த பாதை குறித்து மனம் திறந்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், “விஜய் ஆண்டனியின் ‘நான்’, பரத்தின் ‘காதல்’ ஆகிய திரைப்படங்களில் நான் நடிப்பதாகதான் இருந்தது. ஆனால் காரணமே இல்லாமல் ‘நான்’ படத்தில் இருந்து நீக்கப்பட்டேன்.
‘சென்னை -28’ படத்திற்கான ஆடிஷனிலும் கலந்து கொண்டேன்.
சுமார் 7 வருடங்களாக சினிமாவில் புறக்கணிக்கப்பட்ட பிறகே, ‘வெண்ணிலா கபடி குழு’வில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது” என்றார்.