புகழ் நடிக்கும் ‘4 இடியட்ஸ்’

Published:

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் காமெடி பண்ணிக்கொண்டிருந்த புகழ், சினிமாவிற்கு வந்து காமெடி ரோலில் நடித்தார். அடுத்து ‘மிஸ்டர் ஷூ கீப்பர்’ படத்தில் கதைநாயகன் ஆனார். இப்போது காமெடியன், கதை நாயகன் என இரண்டிலும் நடித்து வருகிறார்.

‘அன்பேசிவம், கோகுலத்தில் சீதை, பகவதி’ போன்ற படங்களை தயாரித்த லட்சுமி மூவீ மேக்கர்ஸ் இப்போது தயாரிக்கும் படத்திலும் புகழ் ஹீரோ. அந்த படத்துக்கு ‘4 இடியட்ஸ்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது, லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் 27வது படம். சஜோசுந்தர் முருகேசன் இயக்குகிறார். திரில்லர் ஜானரில் இந்த படம் உருவாகி உள்ளது.

இது தவிர, ‘அழகர்யானை’ என்ற படத்திலும் புகழ் ஹீரோவாக நடித்து வருகிறார். புகழ் காமெடியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘தேசிங்குராஜா 2’ படுதோல்வி அடைந்தது. அதில் பெண் வேடத்தில் நடித்த புகழ் காமெடிக்கு வரவேற்பு இல்லை. அதனால், அவர் கதைநாயகன் பாதைக்கு திரும்புவதாக தகவல்.

Related articles

Recent articles

spot_img