அரசியலை மையமாகக் கொண்ட தனது அடுத்த படத்தை “Naan Thaan CM” என அறிவித்துள்ளார் நடிகர்-இயக்குநர் பார்த்திபன்.
அரசியலை மையமாகக் கொண்ட தனது அடுத்த படத்தை “Naan Thaan CM” என அறிவித்துள்ளார் நடிகர்-இயக்குநர் பார்த்திபன். இப்படத்தில் அவர் சிங்காரவேலன் என்ற கதாபாத்திரத்தில், முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் ஒருவராக நடிக்கிறார்.
படத்தின் முதல் லுக் போஸ்டர்-ஐ வெளியிட்டு, பார்த்திபன் நகைச்சுவையான அரசியல் உரையுடன் கூறியுள்ளார்:
“பெரியோர்களே, தாய்மார்களே,
வாக்களப் பெருமக்களே!
ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன் . என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலியில் அமர்ந்தப் பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்!
போடுங்கம்மா ஓட்டு
Boat’சின்னத்தைப் பாத்து!
இப்படிக்கு,
C. M . சிங்காரவேலன் எனும் நான்….
‘சோத்துக் கட்சி'”
இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை பார்த்திபன் மேற்கொள்கிறார். படத்தின் தயாரிப்பை பார்த்திபனின் Bioscope Film Framers தயாரிக்கிறது
திரைப்படம் அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்து தனுஷ் நடித்துள்ள இட்லி கடை படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.