தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீசாகிறது.
இந்நிலையில், இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. படக்குழு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பல இந்த விழாவில் கலந்துக் கொண்டனர்.
தனுஷ் அதில் வெறுப்பாளர்களை பற்றி சில வார்த்தைகள் கூறினார் அதில் “ஹேட்டர்ஸ் என்ற ஒரு கான்சப்ட் இல்லை, அது ஒரு 30 நபர்கள் பிழைப்பிற்காக 300 போலி ஐடி-களில் இருந்து அவதூறு கருத்துகளை பரப்பி வருகின்றனர். இங்கு யாரும் யாருக்கும் ஹேட்டர்ஸ் கிடையாது அந்த 30 நபர்களும் எல்லா திரைப்படங்களும் பார்ப்பார்கள். அன்பு கொடுத்தால் திருப்பி அன்பு கொடுப்போம் அன்பின் எழுச்சி தான் எல்லாமே!” என கூறினார்.