தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் கடந்த 2000-ம் ஆண்டில் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான ‘குஷி’ திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது.
எஸ். ஜே. சூர்யா இயக்கிய இந்த படத்தில் விஜய், ஜோதிகா உடன் விஜயகுமார், விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தேவாவின் இசையில் படத்தில் இடம்பெற்ற கட்டிப்புடி; கட்டிப்புடிடா, ரேக்கவீனா, ஒரு பொண்ணு ஒண்ணு, மேகம் கருக்குது உட்பட ஆறு பாடல்களும் ஹிட் ஆகின.
2000 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி வெளியான திரைப்படம் வெளியாகி 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. விஜய்யின் சினிமா கேரியரில் முக்கியமான படமாக குஷி அமைந்தது.
இந்நிலையில் குஷி திரைப்படம் வரும் 25ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.