
தனுஷ் – இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவான‘தேரே இஷ்க் மெய்ன்’ பாலிவுட் படம் கடந்த நவம்பர் மாதம் 28ம் தேதி வெளியானது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடித்துள்ளார். ஆனந்த் எல் ராய், தனுஷின் முந்தைய பாலிவுட் படங்களான ‘ராஞ்சனா’ மற்றும் ‘அட்ராங்கி ரே’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் தனுஷின் நடிப்பிற்கு ரசிகர்களிடமும் நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனுஷின் “தேரே இஷ்க் மெய்ன்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற 23ந் தேதி வெளியாக உள்ளது

