சன் டிவி சீரியல்களின் கிங் என்றால் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களின் ராஜாவாக உள்ளனர்.
இதில் மிகவும் விதவிதமான கான்செப்டுடன் நிறைய ஷோக்கள் ஒளிபரப்பாக ரசிகர்களும் கொண்டாடினார்கள்.
நடனம், பாடல், கேம் ஷோ என நிறைய கான்செப்டுடன் ஷோ ஒளிபரப்பானது.இதனை பார்த்து தான் சில தொலைக்காட்சிகளில் வேறு டைட்டிலுடன் ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தன. இப்போது விஜய்யில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், அண்டா காகசம் என சூப்பர் சூப்பரான ஷோக்கள் ஒளிபரப்பாகிக்கொண்டு வருகிறது.
தற்போது விஜய் டிவி தங்களது சூப்பர் ஹிட் ஷோவை மீண்டும் ஒளிபரப்ப தொடங்கிவிட்டனர்.

அதாவது ரசிகர்கள் அதிகம் கொண்டாடிய ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியின் 3வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாம். இந்த 3வது சீசனிலும் சாண்டி, ஸ்ரீதேவி மற்றும் ரம்பா தான் நடுவர்களாக வர உள்ளனர்.
3வது சீசனின் முதல் புரொமோ இப்போது வெளியாகியுள்ளது

