சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் குழப்பங்கள் நிலவி வருகின்றது. இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையில் ஒரு தகவல் தற்போது கிடைத்திருப்பதாக தெரிகின்றது. சிவகார்த்திகேயனின் அடுத்த படம் வெங்கட் பிரபுவுடன் தான் என்றாலும் அதில் ஒரு ட்விஸ்ட் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றது.
சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் வெளியானது. சுதா கொங்கரா இயக்கம் ,ஜி.வி பிரகாஷ் இசை அதுமட்டுமல்லாமல் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா என பலரது நடிப்பில் உருவான இப்படம் மாபெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்று வருகின்றது. ஆனாலும் வசூல் நல்லபடியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தான் நடிப்பதாக இருந்தார்.
ஆனால் திடீரென ரஜினி பட வாய்ப்பு சிபி சக்ரவர்த்திக்கு கிடைத்ததால் அப்படத்தை இயக்க சென்றுவிட்டார் சிபி சக்கரவர்த்தி. எனவே சிவகார்த்திகேயனின் அடுத்த படம் வெங்கட் பிரபுவுடன் தான் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட் இருப்பதாக ஒரு தகவல் தற்போது கிடைத்திருக்கின்றது. அதாவது என்னதான் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்கினாலும் ரிலீசாகப்போவது என்னமோ SK24 திரைப்படம் தான் என சொல்லப்படுகின்றது.
ஏனென்றால் வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகப்போகும் சைன்ஸ் பிக்ஷன் படமாம். இப்படத்தின் படப்பிடிப்பிற்கும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை முடிப்பதற்கும் ஒரு கால அளவு தேவைப்படும். சற்று டைம் எடுத்துக்கொண்டு தான் இப்பட வேலைகளை செய்ய முடியும் என தெரிகின்றது. அதே சமயம் SK24 திரைப்படம் மிக குறுகிய காலகட்டத்திற்குள் உருவாக்கப்படும் ஒரு படமாம்.

சிபி சக்ரவர்த்தியோ அல்லது வேறு ஒரு இயக்குனர் இயக்கினாலோ அப்படம் கண்டிப்பாக குறுகிய காலகட்டத்திற்குள் முடிக்கப்படும் படமாக தான் இருக்குமாம். அப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தான் தயாரிக்க இருக்கின்றார்கள் என்றும் சொல்லப்படுகின்றது. எனவே அவர் தயாரிக்கும் படம் தான் பராசக்தி படத்திற்கு பிறகு வெளியாகும் சிவகார்த்திகேயனின் படமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் சிபி சக்கரவர்த்தி அடுத்த வருடம் வரைதலைவர் 173 படத்தில் பிசியாக இருப்பார். எனவே அதுவரை பேஷன் ஸ்டுடியோஸ் காத்துகொண்டு இருப்பார்களா ?அல்லது வேறொரு இயக்குனரை தேர்ந்தெடுப்பார்களா ? என்பது தெரியவில்லை. பல மாதங்களுக்கு முன்பு குட் நைட் படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகர் தான் சிவகார்த்திகேயனின் 24 ஆவது படத்தை இயக்குவார் என கிட்டத்தட்ட உறுதியாக சொல்லப்பட்டு வந்தது.
அப்படி இருக்கையில் ஒருவேளை அவருக்கு சிவகார்த்திகேயனின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்குமா ? என்பதும் தெரியவில்லை. இவ்வாறு SK24 படம் குறித்து பல குழப்பங்கள் இருந்து வருகின்றன. இதைத்தாண்டி வெங்கட் பிரபு இயக்கும் படம் தான் சிவகார்த்திகேயனின் 24 ஆவது படம் என்றும் சொல்லப்படுகின்றது. இதற்கெல்லாம் விடை இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே தான் ரசிகர்களுக்கு தெரிய வரும்.

