308 பெண்களுடன் உடலுறவு… – வெளியான ஷாக்கிங் தகவல்

Published:

லியோ படத்தில் வில்லனாக நடித்து வரும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், 308 பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டதாக தெரிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சஞ்சய் தத். கே.ஜி.எஃப் 2 படத்தில் நடிகர் யாஷுக்கு வில்லனாக அதீரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற சஞ்சய் தத்திற்கு தற்போது தென்னிந்திய திரையுலகில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. நடிகர் சஞ்சய் தத், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நடிகர் சஞ்சய் தத்தின் கடந்த கால வாழ்க்கை பற்றிய ஒரு ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது. இவர் மும்பை குண்டு வெடிப்பு வழக்கு மற்றும் போதை பொருள் வழக்கு உள்ளிட்டவற்றில் சிக்கி இருந்தாலும், அதையெல்லாம் மிஞ்சும் விதமாக அமைந்தது தான் இவர் 308 பெண்களுடன் உடலுறவு கொண்ட விவகாரம். சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து சஞ்சு என்கிற திரைப்படம் கடந்த 2018-ம் ஆண்டு எடுக்கப்பட்டது.

அப்படத்தின் மூலம் தான் அவர் 308 பெண்களுடன் உடலுறவு கொண்ட விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. அதில் விபச்சாரிகளும் அடங்குவர் என்று சஞ்சய் தத் அந்த படத்தில் கூறி இருப்பார். உண்மையில் சஞ்சய் தத் எப்படி 308 பெண்களையும் சம்மதிக்க வைத்திருப்பார் என்பது தான் பலரின் கேள்வியாக இருக்கும். அந்த கேள்விக்கு சஞ்சய் தத்தின் வாழ்க்கை கதையை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி ஒரு ஷாக்கிங் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதன்படி, சஞ்சய் தத் தான் டேட்டிங் செய்யும் ஒவ்வொரு பெண்ணையும் முதலில் ஒரு கல்லறைக்கு தான் அழைத்து செல்வாராம். அங்கு சென்றவுடன் என் அம்மாவை நீ சந்திக்க வேண்டும் என்பதற்காக தான் உன்னை இங்கு அழைத்து வந்தேன் என சொல்வாராம் சஞ்சய். அந்த சமயத்தில் அந்த பெண்கள் என்ன ரியாக்ட் செய்கிறார்கள் என்பதை அவர் நோட்டமிடுவாராம்.

சஞ்சய் தத் சொன்னதை கேட்டு மனமுருகிய பெண்களுடன் அவர் நெருக்கமாக பழகி டேட்டிங் செய்வாராம். இதில் ஹைலைட் என்னவென்றால் அவர் கூட்டிச் சென்று காட்டும் கல்லறை அவரது அம்மாவுடையதே இல்லையாம். இத்தகைய தில்லு முல்லு வேலையை செய்து தான் 308 பெண்களையும் அவர் மயக்கியதாக அப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில் ராஜ்குமார் ஹிரானி கூறி இருந்தார்.

சஞ்சய் தத் ஒரு ரியல் லைஃப் மாமாகுட்டியாகவே வாழ்ந்து வந்துள்ளார். அவர் பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருந்த போது அவரின் சமகால நடிகைகள் பெரும்பாலானோருடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். அதுமட்டுமின்றி போதை மற்றும் குடிப்பழக்கத்துக்கும் அடிமையாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img