படு மாஸான சந்தானம் படத்தின் DD Returns Trailer

Published:

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக கலக்கி வந்த சந்தானம், ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டு, இனி காமெடி வேடங்களில் நடிக்கமாட்டேன் என அறிவித்தார். அதன்பின்னர் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் அவருக்கு ஆரம்பத்தில் ஒரு சில படங்கள் ஹிட் ஆனாலும், கடந்த சில ஆண்டுகளாக அவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் படு தோல்வியை சந்தித்து வருகின்றன.

சந்தானத்தின் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் தில்லுக்கு துட்டு திரைப்படம் தான். இதன் முதல் பாகம் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்றதை அடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அதற்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

தற்போது தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வருவதற்காக நடிகர் சந்தானம், தில்லுக்கு துட்டு படத்தின் 3-ம் பாகத்தில் நடித்திருக்கிறார். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடிகை சுரபி நடித்துள்ளார். மேலும் முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற ஜூலை 28-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

 

Related articles

Recent articles

spot_img