அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛ஜவான்’. அனிருத் இசை அமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 7ஆம் திகதி , தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதியின் போஸ்டரை இன்று தனது ட்விட்டரில் நடிகர் ஷாருக்கான் வெளியிட்டுள்ளார்.
கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. மேலும் அந்த போஸ்டரில் ‛தி டீலர் ஆப் டெத்’ என்று கேப்சனுடன் வெளியிட்டுள்ளனர். ஜவான் படத்தை 200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.