# Tags
#kodambakkam

பத்ரிநாத் கோவிலில் ரஜினியை சூழ்ந்த ரசிகர்கள்

ஜெயிலர் படம் வெளியான நிலையில் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ரஜினி ரிஷி கேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று சாமியார்களை சந்தித்தார். அங்குள்ள தயானந்த சரஸ்வதி சாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்தார்.

சாமியார்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இதை தொடர்ந்து நேற்று பத்ரிநாத் கோவிலுக்கு சென்று ரஜினி வழிபட்டார். ரஜினி கோவிலுக்கு வந்த தகவல் அறிந்ததும் அவரைக்காண ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர்.

அவர்களுடன் சிறிது நேரம் ரஜினி உரையாடினார். குளிருக்காக கையுரை மற்றும் மப்ளர் அணிந்த படி கோவிலுக்கு சென்றார். ரஜினி வருகையையொட்டி அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.