விஜய் டிவியில் இருந்து வெளிவந்தது இதனால் தான்- முதன்முறையாக கூறிய டிடி

Published:

தொகுப்பாளினி டிடி இவருக்கு என்று ஒரு அறிமுகமும் தேவையில்லை. எப்படி சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பயணித்தார் என்பது அனைவருக்குமே தெரியும்.

விஜய் தொலைக்காட்சியில் இவர் இல்லாத ஷோ இல்லை என்றே கூறலாம், அந்த அளவிற்கு இவர் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

ஆனால் இப்போதெல்லாம் டிவி பக்கமே காணவில்லை, அதற்கு பதில் இசை நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள் என தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் விஜய் டிவியில் இருந்து வெளியேறியது குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர், மணிக்கணக்காக படப்பிடிப்பு நேரத்தில் நின்று கொண்டிருந்ததால் தனக்கு காலில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறியிருக்கிறார்.

பொதுவாக விஜய் டிவியில் நான் தொகுத்து வழங்காத நிகழ்ச்சி இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறேன்.

அப்போதெல்லாம் தொடர்ச்சியாக பல மணி நேரங்கள் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் அப்போது முழுக்க முழுக்க தொகுப்பாளர்கள் நிற்க வேண்டும். அது எனக்கு மட்டுமல்ல தொகுப்பாளராக இருக்கும் அனைவருக்கும் இந்த மாதிரி நிலைமை தான்.

ஒருகட்டத்தில் எனது உடல்நிலை சரியில்லாமல் போனதால் எனக்கு நிகழ்ச்சிகள் குறைய தொடங்கிவிட்டது, எனவே தான் விஜய் டிவியில் இருந்து வெளியேறினேன் என கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img