“என் மார்பை பற்றி கமெண்ட் வரும்போது இந்த பதிலை சொல்ல தோணும்..” நீலிமா ராணி பதிலடி..

Published:

நீலிமா ராணி ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது

கமல்ஹாசனின் தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நீலிமா ராணி. இதை தொடர்ந்து பாண்டவர் பூமி உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர் சின்னத்திரையில் அறிமுகமானார்.

மெட்டி ஒலி, கோலங்கள், அத்திப்பூக்கள், வாணி ராணி போன்ற சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கும் போதே ஒரு சில படங்களிலும் நீலிமா ராணி நடிக்க தொடங்கினார்.

திமிரு, சந்தோஷ் சுப்ரஅனியம், நான் மகான் அல்ல, உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருந்தார். அவர் கடைசியாக ஆகஸ்ட் 16, 1947 என்ற படத்தில் கௌதம் கார்த்திக்கிற்கு அம்மாவாக நடித்திருப்பார்.

இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நீலிமா ராணிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இசைவானன் திரைத்துறையை சேர்ந்தவர் இல்லை என்றாலும அவர் ஒரு திரைப்படத்தை தயாரிக்க ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் சேர்ந்து ஒரு படத்தை தயாரித்ததால் தங்களுக்கு ரூ.4 கோடி அளவுக்கு கடன் ஏற்பட்டதாக நீலிமா ராணி சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நீலிமா ராணி ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பேசிய அவர் “ என்னுடைய மார்பகங்களை பற்றி நெகட்டிவாக கமெண்ட் செய்யும் போது, எனக்கு உடனே பதில் சொல்ல தோன்றும். நான் இன்னும் என் குழந்தைக்கு பால் கொடுத்துட்டு இருக்கேன் என்று சொல்ல தோன்றும்.

ஆனால் அவனுக்கெல்லாம் பதில் சொல்லி என்ன ஆகப் போகிறது என்று கமெண்டை டெலிட், அவரை பிளாக் செய்துவிட்டு நான் அடுத்த வேலையை பார்க்க தொடங்கிவிடுவேன்” என்று தெரிவித்தார்.

அதே போல் என்னுடை உடல் எடை குறைத்தும் நெகட்டிவ் கமெண்ட்ஸ் வரும். எனக்கே தெரியும் எனது உடல் எடையை குறைக்க சிறிது காலம் எடுக்கும் என்று.. ஏனெனில் 2 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளேன். எனது உடல் 2 மிகப்பெரிய மாற்றங்களை சந்தித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

 

Related articles

Recent articles

spot_img