தனுஷின் 50வது பட தலைப்பு ‛ராயன்’

Published:

‛கேப்டன் மில்லர்’ படத்திற்கு பின் தனுஷ் ஒரு படத்தை இயக்கி, நடித்து வந்தார். இது அவரின் 50வது படமாகும். இந்த படத்திற்கு பெயர் வைக்காமலே படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்காக தனுஷ் மொட்டை போட்டு நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன.

தற்போது இந்த படத்திற்கு ‛ராயன்’ என பெயரிட்டு படத்தின் முதல்பார்வை போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். அதில் தள்ளுவண்டி கடை மாதிரியான ஒரு வாகனத்தில் சந்தீப் மற்றும் காளிதாஸ் கையில் கத்தியுடன் இருக்க, தனுஷூம் கையில் ஆயுதம் ஒன்றுடன் ரத்தக்கறை படிந்திருக்க உள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தியிலும் இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். பார்லிமென்ட் தேர்தலுக்கு பிறகு கோடை விடுமுறையில் அதாவது மே மாதத்தில் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img