மும்பை தொழில் அதிபருடன் வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்

Published:

நடிகை வரலட்சுமிக்கு மும்பை தொழில் அதிபர் நிகோலய் சச்தேவ் உடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. ‛போடா போடி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ‛தாரை தப்பட்டை, சர்கார், சண்டக்கோழி 2′ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அசத்தி வருகிறார். தற்போது அவருக்கு திடீரென திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

மும்பையை சேர்ந்த தொழில் அதிபரான நிகோலய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களின் நிச்சயதார்த்தம் மார்ச் 1ம் தேதி மும்பையில் இருவீட்டாரது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்க நடந்துள்ளது. இந்தாண்டுக்குள் திருமணம் நடக்கும் என்றும், திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

வரலட்சுமியும், நிகோலய் சச்தேவ்வும் கடந்த 14 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img