வயதான ஜாக்கி சான்..

Published:

நடிகர் ஜாக்கி சான் உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்ட நடிகராக இருந்து வருகிறார். அவரது குங்ஃபூ சண்டை காட்சிகள் எந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்தது என சொல்லி தெரியவேண்டியது இல்லை.

ஜாக்கி சானுக்கு தற்போது 70 வயதாகிறது. அவர் நேற்று தான் 70வது பிறந்தநாளை கொண்டாடினார்.

சமீபத்தில் ஜாக்கி சான் மிகவும் வயதான தோற்றத்தில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. அவரது ரசிகர்கள் அதை பார்த்து கடும் அதிர்ச்சி ஆகி இருந்தனர்.

அதை பற்றி விளக்கம் கொடுத்த ஜாக்கி சான், “வருத்தப்படாதீங்க, அது என்னுடைய லேட்டஸ்ட் படத்தில் வரும் ஒரு கேரக்டர் தான். அந்த கதாபாத்திரம் வெள்ளை முடி, தாடி வைத்து வயதான தோற்றத்தில் நடிக்க தேவைப்பட்டதனால் நடித்தேன்” என கூறி இருக்கிறார்.

https://www.instagram.com/p/C5cvo9ZyK7o/?utm_source=ig_web_copy_link

 

Related articles

Recent articles

spot_img