விஜய்க்கு என அட்வைஸ் இதுதான்: நடிகர் கார்த்திக்…..

Published:

நடிகர் கார்த்திக் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு எனது அட்வைஸ் இது தான் என்று கூறியுள்ளார்.

நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவர் 2026 ஆம் ஆண்டு தேர்தலை நோக்கி பயணம் செய்யப் போவதாக கூறியுள்ளார் என்பதை ஏற்கனவே அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி குறித்து ஏற்கனவே பல திரை உலக பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்த நிலையில் தற்போது நவரச நாயகன் கார்த்திக் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது இது குறித்து தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியலுக்கு வந்தது எனக்கு மிகவும் சந்தோசம், அவரை நான் வரவேற்கிறேன், தம்பி விஜய் தாராளமாக வரட்டும், அவரைப் போன்றவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது, அதுவும் திரையுலகில் பீக்கில் இருக்கும் போது அவர் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன் என்றும் கூறினார்.

மேலும் ஒரு அண்ணனாக நான் அவருக்கு கூறும் அட்வைஸ் என்னவென்றால் அரசியலுக்கு வந்தாலும் அவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும். சினிமாவில் நடிப்பதை நிறுத்தக்கூடாது. ஏனெனில் திரையில் சொல்லப்படும் கருத்துக்கள் மக்களை சுலபமாக சென்றடையும். அதனால் அவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்று கூறுகிறேன்’ என்றார்.

கார்த்திக் அட்வைஸை ஏற்று கொண்டு விஜய் தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா அல்லது தனது முடிவில் உறுதியாக இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related articles

Recent articles

spot_img