அஜித்த வெளிய வர சொல்லுங்க..!

Published:

தமிழகத்தில் இன்றைய தினம் பரபரப்பாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் சாதாரண மக்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் தமது கடமையை சரிவர செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் அஜித் முதன் முதலாக தனது வாக்கை  பதிவு செய்துள்ளார். அதன் பின்பு சிவகார்த்திகேயன், குஷ்பூ குடும்பம், ரஜினி, ராதிகா சரத்குமார், கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் என பலரும் வாக்கு பதிவுகளை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், நடிகர் அஜித்தை வாக்குப்பதிவு செய்வதற்காக முதன்முதலிலே உள்ளே அனுப்பியது தவறு என முதியவர் ஒருவர் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குவாதம் செய்துள்ளார். தற்போது குறித்த காணொளி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

அதாவது நடிகர் அஜித் எப்போதுமே வரிசையில் என்று வாக்கு  செலுத்துவது வழக்கம். அதன்படி இம்முறையும் திருவான்மையூரில் உள்ள அஜித் அங்குள்ள வாக்குச்சாவடி மையத்தில் காலையிலேயே வந்து சில நிமிடங்கள் காத்திருந்து வாக்கு செலுத்தி விட்டு சென்றுள்ளார். தான் வாக்கு செலுத்திய பின் தனது மை வைத்த விரலைக் காட்டி ரசிகர்களையும் ஓட்டு போட சொல்லாமல் சொல்லியுள்ளார்.

இவ்வாறான நிலையில் வாக்குச்சாவடி மையத்திற்கு அதிகாரிகள் வந்ததும் முதல் ஆளாக நடிகர் அஜித்தை உள்ளே அனுப்பி உள்ளனர். இதை பார்த்து கோவம் அடைந்த முதியவர் ஒருவர் நாங்கள் எல்லாம் வரிசையில் நிற்க நீங்கள் எப்படி அஜித்தை முதலில் உள்ளே அனுப்பலாம்? அவரை வெளியே வர சொல்லுங்க என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாராம். தற்போது குறித்த காணொளி சமூக வலைதளங்கள் வைரலாகி வருகின்றன.

 

Related articles

Recent articles

spot_img