பீதியை கிளப்ப வரவிருக்கும் 18 படங்கள்…

Published:

காதல், ரொமான்டிக், ஆக்சன், மாஸ் போன்ற கமர்ஷியல் படங்களை பார்த்து பார்த்து ரொம்பவே போர் அடித்து விட்டது. ஏதாவது வித்தியாசமான படங்கள் இருந்தால் தான் மக்கள் விரும்பிப் பார்க்க ஆசைப்படுகிறார்கள். இதையெல்லாம் பூர்த்தி செய்யும் வகையில் தற்போது பேய்களை வைத்து பார்ப்பவர்களை பீதியை கிளப்ப ஹாரர் படங்கள் ரிலீஸ் ஆவதற்கு வரிசை கட்டி இருக்கிறது.

ஒரு திரில்லர் படத்தை பார்க்கும் பொழுது எதையுமே மனசுல வைக்காம பயத்தை மட்டுமே கண்ணில் வைத்து சீட்டின் நுனியில் உட்கார்ந்து படங்களை பார்க்கும் அளவிற்கு நிறைய படங்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது 18 படங்கள் தயாராக இருக்கிறது. அது என்ன படங்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.

கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் கிங்ஸ்டன் ஒரு பேண்டஸி திகில் திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படம் ஜிவி பிரகாஷின் 25வது படம். அடுத்து சத்யராஜ்மற்றும் சிபிராஜ் நடிப்பில் ஹாரர் த்ரில்லர் படமாக ஜாக்சன் துரை 2 இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

இதனை அடுத்து அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் டிமாண்டி காலனி 2 செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவர இருக்கிறது. அடுத்து இயக்குனர் பக்ரீத் புகழ் ஜெகதீசன், வெற்றி மற்றும் பிக் பாஸ் ஷிவானி நாராயணன் நடிப்பில் இரவு என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.

அடுத்ததாக அறிவழகன் வெங்கடாசலம் இயக்கத்தில் ஆதி, லட்சுமிமேனன், லைலா மற்றும் சிம்ரன்நடிப்பில் ஒரு திரில்லரான படமான சப்தம் உருவாகி வருகிறது. இதனை அடுத்து பார்த்திபன்இயக்கத்தில் டீன்ஸ் ஹாரர் படமாக எடுக்கப்பட்டு வருகிறார். அடுத்து இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகாஇரட்டை வேடங்களில் காந்தாரி என்ற படத்தில் திரில்லரான கதையில் நடித்து வருகிறார்.

இதனை அடுத்து சுந்தர் சி, வழக்கம் போல் பேய்களை வைத்து தொடர் கதையான அரண்மனை படத்தை எடுத்து வருகிறார். அந்த வகையில் ராசி கண்ணா மற்றும் தமன்னா போன்ற இரண்டு அழகிய ஹீரோயின்களை பிசாசுகளாக மாற்றி அரண்மனை 4 படத்தை எடுத்து வருகிறார். இப்படம் மே மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.

அடுத்ததாக போஸ்டரை பார்த்தாலே பயந்து ஓடும் அளவிற்கு ஜிவி பிரகாஷ் கொடூரமான பேய் வேஷத்தில் ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் சூர்ப்பணகை என்ற படத்தை திரில்லராக நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து பீட்சா 4, புல்லட், ஜின், ஆத்மா, ரவுடி பேபி போன்ற படங்களும் உருவாகி வருகிறது. தற்போது இதுதான் ட்ரெண்டிங் என்று சொல்லும் அளவிற்கு முக்கால்வாசி இயக்குனர்கள் பேயை வைத்து மிரட்டி கொண்டு வருகிறார்கள்.

 

Related articles

Recent articles

spot_img