‘அரண்மனை 4’ டூப் இல்லாமல் செய்த ஸ்டண்ட்கள்..!

Published:

சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா நடிப்பில் உருவான ’அரண்மனை 4’ திரைப்படம் வரும் மே 3ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’அரண்மனை’ படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ’அரண்மனை 4’ படமும் அதே போல் வரவேற்பை பெறுவது மட்டுமின்றி வசூலையும் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகிய இருவரும் போட்டி போட்டு ஆடிய பாடல் காட்சி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் போது தனக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்து தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு ஸ்டண்ட் காட்சியில் ரோப் கட்டி அந்தரத்தில் தொங்கும் காட்சியின் வீடியோவும் இருக்கும் நிலையில் அதை பார்த்து ரசிகர்கள் ’அரண்மனை 4’ படத்திற்காக தமன்னா இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து உள்ளாரா என்ற கேள்வியை ஆச்சரியத்துடன் எழுப்பி வருகின்றனர்.

மேலும் இந்த பதிவில் தமன்னா ’அரண்மனை 4’ திரைப்படம் ரசிகர்களை அலற வைத்து பயமுறுத்தும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த படத்திற்கு பின் உள்ள சில இனிமையான தருணங்களை உங்களுக்கு பகிர்ந்து உள்ளேன். இந்த படத்தில் பணி புரிந்தது சவால் ஆனதாக இருந்தாலும் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. உண்மையில் இந்த ஸ்டண்ட்களை எல்லாம் நானே ரிஸ்க் எடுத்து செய்து முடித்தேன்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

தமன்னாவின் இந்த பதிவு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு செய்யப்பட்ட நிலையில் அதற்குள் கிட்டத்தட்ட 4 லட்சம் லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/C6QNEmtLVHB/?utm_source=ig_web_copy_link

 

Related articles

Recent articles

spot_img