அறுவை சிகிச்சை குறித்து ஸ்ருதிஹாசனின் பதில்!

Published:

நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். சமீபகாலமாக திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம், நடிகர், நடிகைகள் அழகுக்காகவும், தோற்ற பொழிவிற்காகவும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

ஸ்ருதிஹாசன் அளித்த பதிலின் படி, “மக்கள் மற்றவர்களின் தோற்றத்தை வைத்து மதிப்பிடக்கூடாது. அறுவை சிகிச்சைகளின் மூலம் உடலில் மாற்றங்களைக் கொண்டு வருவது எந்தவொரு தவறும் கிடையாது.

அதுவும் மற்றவர்களின் கட்டாயமின்றி செய்யும் வரைதான். ஆனால், ஒருவரின் உடலையோ, அழகையோ, தோற்றத்தை வைத்து விமர்சிப்பது தான் தவறு” எனக் கூறினார்.


Related articles

Recent articles

spot_img