விஜய் சேதுபதி பிறந்தநாள்… புதிய படத்தின் தலைப்பை வெளியிட்ட படக்குழு

Published:

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். பான் இந்தியா அளவில் இப்படம் தயாராக உள்ளதாகவும், இப்படத்தை சார்மி கவுர் தயாரிப்பதாக கூறப்பட்டுள்ளது. நடிகை தபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அதன்பின் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், விஜய் சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அவரின் புதிய படம் தொடர்பான அறிவிப்பை ஒன்றை படக்குழு அறிவித்துள்ளது.

அதாவது, பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு ‘Slum Dog – 33 Temple Road’ என பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான போஸ்டரை வெளியிட்டு விஜய் சேதுபதிக்கு படக்குழு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. போஸ்டரில் விஜய் சேதுபதி ஆக்ரோஷமாக ரத்தக்கறை படிந்த கத்தியுடன் பணப்பெட்டிகளுக்கு நடுவில் நிற்கும்படியாக உள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜூன் மாதம் வெளியாக உள்ள ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img