Bigg Boss Season 9 டைட்டில் வின்னர் இவரா? – வெளியான தகவல்

Published:

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் முடிவுக்கு வருகிறது. போட்டியின் நாட்கள் நெருங்க நெருங்க கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். இவர் தான் வின்னராவார் என்ற கருத்துகளும் மேலோங்கி வந்தது.

இந்த சீசனில் பார்வதி – கம்ருதீன் லவ் டிராக் ரசிகர்களை வெறுப்பேற்றியது. குறிப்பாக டிக்கெட் டூ பைனல் டாஸ்கின் கடைசி விளையாட்டில் காரில் இருந்து சான்ட்ராவை பாருவும் கமருதீனும் கீழே தள்ளிவிட்டது இணையத்தில் பெரும் பேசுபொருளானது. இதனையடுத்து இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

டைட்டில் வின்னர் ஆவார் என்று பெரும்பாலானோரால் கூறப்பட்ட கானா வினோத் ரூ.18 லட்ச பணப்பெட்டியுடன் வெளியேறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், திவ்யா கணேஷ், சபரி, விக்கல்ஸ் விக்ரம், ஆரோரா ஆகிய 4 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் பிக்பாஸ் சீசன் 9 டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் தேர்வாகியுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுகிறது.

Related articles

Recent articles

spot_img