இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூலி படத்திற்கு பிறகு கைதி 2 படத்தை தான் இயக்க போகிறார் என முன்பு கூறப்பட்டது. ஆனால் அவர் தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு கதை சொல்லி, அடுத்த ப்ராஜெக்ட்டை அவருடன் உறுதி செய்துவிட்டார்.
சமீபத்தில் லோகேஷ் மற்றும் அல்லு அர்ஜுன் இணையும் AA23 படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வீடியோ உடன் வந்திருந்தது.

இந்நிலையில் கார்த்தி நடிப்பில் வா வாத்தியார் படம் தற்போது ரிலீஸ் ஆகி இருக்கிறது. அந்த படம் ரிலீஸ் ஆகி இருக்கும் பல்வேறு தியேட்டர்களுக்கு கார்த்தி நேரில் சென்று வருகிறார்.
அப்போது பத்திரிகையாளர்கள் அவரிடம் “லோகேஷ் அல்லு அர்ஜுன் படத்தை எடுக்க சென்றுவிட்டார். கைதி 2 நிலை என்ன?” என கேள்வி எழுப்பினார்கள்.
“அதை லோகேஷ் கனகராஜே சொல்வார்” என ஒரே வரியில் பதில் கூறிவிட்டார் கார்த்தி.


