மே 5க்கு ‛குலசாமி’ தள்ளிவைப்பு
சரவண சக்தி இயக்கத்தில் விமல், தான்யா ஹோப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‛குலசாமி’. முன்னாள் டிஜிபி ஜாங்கிட் போலீஸ் கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார். சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தை சொல்லும் விதமாக இந்தப்படம் உருவாகி உள்ளது. விஜய் சேதுபதி வசனம் எழுதி உள்ளார். இந்தப்படம் இன்று(ஏப்., 21) வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் போதிய தியேட்டர் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை. இதனால் மே 5க்கு பட ரிலீஸை தள்ளி வைத்துள்ளனர். இதுபற்றி படக்குழு வெளியிட்ட அறிக்கை : ‛‛ஏப்ரல் […]