மயில்சாமி நடித்த வெப்சீரிஸ் குறும்படமாக வெளியாகிறது
கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தனது மிமிக்ரி திறமையாலும், நகைச்சுவை நடிப்பாலும் பிறருக்கு உதவி செய்யும் குணத்தாலும் தனித்துவமான மதிப்பை பெற்றிருந்தவர் நடிகர் மயில்சாமி. கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட இவரது மறைவு எல்லோருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மயில்சாமி தனது மரணத்திற்கு முன்பாக ‘விளம்பரம்’ என்கிற வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரேகா நாயர் இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்தார். அசோகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், கார்த்திக்ராஜா இசை அமைத்துள்ளார். இதன் முதல் […]