11 ஆண்டுளுக்குப் பிறகு மலையாளத்திற்கு திரும்பிய ராகினி திவேதி
கன்னடத்தில் கடந்த 2009ல் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராகினி திவேதி. தமிழில் நிமிர்ந்து நில் என்கிற படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 2020ல் போதைப்பொருள் குற்றச்சாட்டிற்கு ஆளாகி சிறைச்சாலைக்கும் சென்று வந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த ஐந்து வருடங்களாக இவரது நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் இவர் நடித்துள்ள ஷீலா என்கிற திரைப்படம் வெளியாகி உள்ளது. சில உண்மைகளை தேடி கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு பயணிக்கும் […]