பொன்னியின் செல்வன் 2 – விமர்சனம்
இன்றைய தலைமுறை ஒரு பிரம்மாண்ட சரித்திரப் படத்தைக் காணும் வாய்ப்பை, சிறந்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் ஏற்படுத்தித் தந்த இயக்குனர் மணிரத்னத்திற்கு முதல் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். இதற்கு முன்பு சில ஜாம்பவான்கள் எடுக்க முயன்று இயலாமல் போனதொரு படம். அதை முடித்துக் காட்டியதே பெரும் சாதனைதான். அந்த சாதனையைப் படைக்க படத்தைத் தயாரிக்க முன்வந்த தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்திற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் கோடான கோடி நன்றியைச் சொல்ல வேண்டும். ஆதித்த கரிகாலன், […]